News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி: தூத்துக்குடி மாணவ, மாணவிகளுக்கு மேயர் ஜெகன் வாழ்த்து :

22 Sep, 2026 — 12:51 PM
ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி: தூத்துக்குடி மாணவ, மாணவிகளுக்கு மேயர் ஜெகன் வாழ்த்து :

தேசிய அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவ மாணவியர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.

பாண்டிச்சேரி அமெச்சூர் ரோல் பால் சங்கம் மற்றும் ரோல் பால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பாக காரைக்காலில் நடைபெற்ற 7வது தென்மண்டல தேசிய அளவிலான 14 வயதிற்க்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் ரோல்பால் போட்டிகளில் வெற்ற பெற்ற தூத்துக்குடி மாணவ மாணவியர்களை மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்தினார்.

அப்போது, மாணவர்கள் ரோல்பால் விளையாடுவதற்காக மைதானம் அமைத்து தருமாறு மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதனையும் வரும் நாட்களில் நிறைவேற்றி தருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வில் பயிற்சியாளர் ஜோசப்ராஜ் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

3

கருத்துக்கள்