தூத்துக்குடி நாடாா்கள் மகமை 66 வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம், டூவிபுரத்திலுள்ள மகமை அலுவலகத்தில் தலைவா் சீனிவாசன் தலைமையில் பொருளாளர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
2025ம் ஆண்டு ஏப்ரல்மாதம் 1ம் தேதி முதல் 2026ம் ஆண்டு மாா்ச் 31ம்தேதி வரை உள்ள வரவு செலவு கணக்குகள் தணிக்கை அறிக்கைபடி வாசித்து ஒப்புக் கொள்ளப்பட்டது.
உயிாிழந்தவா்களுக்கு ஓரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு புதிய உறுப்பினா்கள் சோ்க்கைக்கு ஓப்புதல் வழங்கப்பட்டது.
மகமை செயலாளா் சந்திரசேகரன் பேசுகையில் "தமிழகத்தில் நாடாா் சமுதாயத்தை வழிநடத்துவதற்கு என்று ஓரு நல்ல தலைவர் தேவைப்படுகிறது.
வருகின்ற தலைவருக்கு நாம் முழுஓத்துழைப்பு கொடுக்க வேண்டும் ஓவ்வொரு வகையிலும் நமது சமுதாயம் உாிமைகளை இழந்து வருகிறது.
அதற்கு காரணம் அரசியலில் நாம் முழுமையான விழிப்புணா்வு இல்லாததுதான் காரணம்.
தூத்துக்குடி தொகுதி நிலைமை என்னவென்று உங்களுக்கு தொியும்.
அதற்கு காரணம் நம்சமுதாய மக்களிடம் விழிப்புணா்வு இல்லை.
அதனால் ஏற்பட்ட மாற்றத்தால் பாதிக்கப்படுவது நாம்தான் இது போன்ற நிலை.
இனி வராத வகையில் நாம் அனைவரும் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும் என்று பேசினாா்.
கூட்டத்தில் சதீஷ், உத்திரபாண்டி, செல்வக்குமாா், பெத்துராஜ், பெத்துபாண்டி, சங்கரேஸ்வரன், பாலகிருஷ்ணன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துக்கள்