News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “மைக்ரோபெஸ்ட் 2026" போட்டிகள் :

22 Sep, 2026 — 12:48 PM
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “மைக்ரோபெஸ்ட் 2026" போட்டிகள் :

கோவில்பட்டி கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பாக சர்வதேச அளவிலான இரண்டு நாட்கள் கருத்தரங்கு மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் “மைக்ரோபெஸ்ட் 2026 நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் முன்னிலை வகித்து துவங்கி வைத்தார்.

இத்துறையின் தலைவர் வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மலேசியா நாட்டில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் துறையின் விரிவுரையாளர் முனைவர்.சர்மிளா முத்துகிருஷ்ணன் இணையம் வாயிலாக கலந்து கொண்டு “பாதுகாப்பான மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி இல்லாத உணவு முறைக்காக மீன்வளர்ப்பில் நுண்ணுயிர் சமூக மேலாண்மை பயன்பாடுகள்” என்ற தலைப்பில் மாணவர்களிடையே கருத்துரையாற்றினார்.

இதனை தொடர்ந்து இத்துறையின் முன்னாள் மாணவியும், எட்டயபுரம் மூர்த்தி அக்ரோ டிரேடர்ஸின் மேலாண்மை இயக்குனருமான திலகம் ( 2001 – 2004 ) கலந்து கொண்டு நுண்ணுயிரியல் துறையின் சமூக மேலாண்மை குறித்து சிறப்புரையாற்றினார்.

4

கருத்துக்கள்