News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை : தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை ;

22 Sep, 2026 — 12:38 PM
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை : தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை ;

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி உள்ளது.

இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்கிறது.

இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது மேலும் கடலில் மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சொல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை தொடர்ந்து, தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதனால் 272 விசைப்படைகளும் கரையில் கட்டப்பட்டுள்ளன.

3

கருத்துக்கள்