News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

குடிநீர் இணைப்பு தராமலேயே 7 முறை பில் அனுப்பிய அதிகாரிகள் : தூத்துக்குடி மாநகராட்சி அலட்சியம் :

22 Sep, 2026 — 12:35 PM
குடிநீர் இணைப்பு தராமலேயே 7 முறை பில் அனுப்பிய அதிகாரிகள் : தூத்துக்குடி மாநகராட்சி அலட்சியம் :

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்‌காமலேயே தொடர்ந்து பில் அனுப்பி வருவதாகவும் வீட்டின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஜி.பி.காலனி பகுதியில் முறையாகக் கட்டணம் செலுத்தி 3 ஆண்டுகள் கடந்தும் குடிநீர் இணைப்பு வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருவதாகவும், நீர் வழங்‌காமலேயே தொடர்ந்து பில் அனுப்பி வருவதாகவும் வீட்டின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஜி.பி.காலனி 2-வது தெரு மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயலு.

இவர் தனது வீட்டிற்குக் குடிநீர் இணைப்பு கேட்டு கடந்த 2024-ஆம் ஆண்டு விண்ணப்பித்தார்.

அதற்கான குடிநீர் இணைப்புக் கட்டணம் ரூ.

15,450 மற்றும் பாதாள சாக்கடைத் திட்டக் கட்டணம் ரூ.

4,000 என மொத்தம் ரூ.

19,450-ஐ மாநகராட்சிக்கு முறையாகச் செலுத்தியுள்ளார்.

ஆனால், கட்டணம் செலுத்தி 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இதுவரை அவரது வீட்டிற்குக் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.

வீட்டிற்குக் குடிநீர் இணைப்பே கொடுக்காத நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை 7 தவணைகளாகக் குடிநீர்க் கட்டண பில் அனுப்பப்பட்டுள்ளது.

"வராத குடிநீருக்கு எதற்காகக் கட்டணம் செலுத்த வேண்டும்?" என வீட்டின் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பலமுறை நேரில் சென்று மனு அளித்தபோதிலும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட சுப்பராயலு கூறுகையில், "கடந்த 2023-ஆம் ஆண்டு புதிய வீடு கட்டி, 2024-இல் மாநகராட்சிக்கு முழு தொகையும் செலுத்தி ரசீது வைத்துள்ளேன்.

என் வீட்டிற்கு 50 மீட்டர் தொலைவிலேயே குடிநீர் பிரதான குழாய் இருந்தும் அதிகாரிகள் இணைப்புத் தர மறுக்கின்றனர்.

இதனால் தினமும் பல கிலோமீட்டர் சென்று குடிநீர் சுமந்து வரும் அவலநிலை உள்ளது.

இது குறித்துக் கேட்கச் சென்றால் மிரட்டல் விடுக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கட்டணம் செலுத்தியும் குடிநீர் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உடனடியாக இப் பிரச்சினையில் தலையிட்டு, ஜி.பி.

காலனியில் நிலுவையில் உள்ள குடிநீர் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தண்ணீர் வழங்காமல் அனுப்பப்பட்ட 7 தவணை பில்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3

கருத்துக்கள்