காலாண்டுத் தேர்வு எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தேதி மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 09.09.2026 அன்று முதல் மாவட்ட மற்றும் மண்டல அளவில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான நீச்சல் போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி 16.09.2026 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடைபெறுவதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு போட்டி தேதி 06.10.2026 அன்று மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, நீச்சல் போட்டி மற்றும் கைப்பந்து போட்டி 06.10.2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகள் 06.10.2026 அன்று உரிய நேரத்தில் கலந்து கொண்டு போட்டியில் பங்கு பெறலாம்.
அதேப்போல் 28.09.2026 அன்று நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகள் 07.10.2026 அன்று காலை 8.00 மணிக்கு நடைபெறும் போட்டியில் பங்கு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்