News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

தூத்துக்குடியில் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் துவக்க விழா : அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்பு :

22 Sep, 2026 — 11:33 AM
தூத்துக்குடியில் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் துவக்க விழா : அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்பு :

தூத்துக்குடியில் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் துவக்க விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் கலந்து கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

தமிழக முதல்வர் விஜய் சென்னையில் இன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.

ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் விஷூமகாஜன் ஆகியோர் மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி மாணவர்களுடன் உணவருந்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்த்தாவது: பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் அரசு மற்றும் உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகள் வரை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கப்பட்டுவந்தது.

தற்போது பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று துவக்கிவைத்தார்.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 1223 பள்ளிகளில் 35,283 மாணவர்களும், மாநகராட்சிக்குட்பட்ட - 100 பள்ளிகளில் 14,404 மாணவர்களும், நகராட்சிகள் பகுதிக்குட்பட்ட - 55 பள்ளிகளில் - 7572 மாணவர்களும் ஆக மொத்தம் 1378 பள்ளிகள் 57,259 மாணவர்கள் இத்திட்டத்தில் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பயன்பெற்றுவருகிறார்கள்.

இத்திட்டத்தை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சார் ஆட்சியர் தூத்துக்குடி ஆகாஷ் குப்தா, உதவி ஆட்சியர் பயிற்சி பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ – மாணவியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

3

கருத்துக்கள்