திருப்பரங்குன்றம் முழு மலையையும் அளவீடு செய்ய முடியாது என உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே, திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தேன்.
இதனை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் புதிதாக மனு அளிக்கவும், மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
அதன்படி மனு அளித்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
கருத்துக்கள்