திருப்பூரில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி தற்போது ரூ.350-க்கு விற்பனையாகிறது.
இதனால் வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது போதிய மழை இல்லாததால் பல இடங்களில் தக்காளி செடிகள் காய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்