News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார் :

11 Sep, 2026 — 02:33 PM
பத்மஸ்ரீ விருது பெற்ற  தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார் :

தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்.

கடந்த 2 நாட்களாக காய்ச்சல் காரணமாக ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று காலை சாலமன் பாப்பையா உயிர் பிரிந்தது.

கலகலப்பாக பட்டிமன்றங்களை நடத்துவதில் புகழ்பெற்றவர் சாலமன் பாப்பையா.

அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களோ, இனிய குழந்தைகளே என்றொலிக்கும் கணீர்க் குரலுக்கு சொந்தக்காரர்.

புராணங்கள், இலக்கியங்களை பேசிக்கொண்டிருந்த பட்டிமன்றங்களில் எளிய மக்களின் வாழ்க்கையை பேச வைத்தவர் என்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக மதுரையில் காலமானார்.

அவருக்கு வயது 90.

12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியவர் சாலமன் பாப்பையா.2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4

கருத்துக்கள்