News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

பிளஸ் 2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்த நெல்லை நீதிமன்றம் :

08 Sep, 2026 — 03:23 PM
பிளஸ் 2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்த நெல்லை நீதிமன்றம் :

நெல்லையில் பிளஸ் 2 மாணவியை ஏமாற்றி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாணவியை, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு தனது நண்பர்களான முனீஸ்வரன் மற்றும் சின்னக்குட்டி ஆகியோரையும் வரவழைத்து, மூவரும் சேர்ந்து மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்த வழக்கு, நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தற்போது நீதிபதி சுரேஷ்குமார் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இதில் முக்கிய குற்றவாளியான சின்னக்குட்டிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் முனீஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், முருகேசனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கான அபராதத் தொகை குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

2

கருத்துக்கள்