News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

பிரபல மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜியோ குட்டப்பன் காலமானார் :

20 Aug, 2026 — 07:35 PM
பிரபல மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜியோ குட்டப்பன் காலமானார் :

மூத்த மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஜியோ குட்டப்பன் (90) கொச்சியில் மாரடைப்பு காரணமாகக் காலமானார்.

அவரது மறைவுக்கு மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தனது 90-வது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், ஜியோ குட்டப்பனுக்குத் திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக எர்ணாகுளம் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அதிகாலை 1.30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

'ஜியோ சினிமாஸ்' என்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் மலையாளத் திரையுலகில் தடம் பதித்த இவர், "இனிப்பும் புளிப்பும்", "ஏழாம் கடலின் அக்கறையே", "மீன்", "ஈநாடு", "மினிமோல்" உட்படப் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.

இயக்குநர் ஐ.வி.

சசி இயக்கிய பல திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னத்தின் 'உணரு': இயக்குநர் மணிரத்னம் தனது திரைப்பயணத்தின் தொடக்கக் காலத்தில், 1984-ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் சுகுமாரன் ஆகியோரை வைத்து மலையாளத்தில் இயக்கிய அவரது இரண்டாவது திரைப்படமான "உணரு" படத்தை ஜியோ குட்டப்பனே தயாரித்திருந்தார்.

5

கருத்துக்கள்