நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மதுரையைப் பின்னணியாக வைத்து உருவாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழின் முன்னணி இயக்குநர்கள் இணையான புஷ்கர் - காயத்ரி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்னதாகவும் அது எஸ்கேவுக்குப் பிடிக்க முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளாராம்.
இப்படத்திற்கான பூஜையும் நடைபெற்று முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பார்க்கிங் திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
அப்படத்திற்காக தேசிய விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்