News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

மனைவியைப் பிரிந்தார் ஸ்ரீநாத் பாசி

14 Sep, 2026 — 03:51 PM
மனைவியைப் பிரிந்தார் ஸ்ரீநாத் பாசி

பிரம்​மாண்ட வெற்றி பெற்ற ‘மஞ்​சும்​மள் பாய்​ஸ்’ படம் மூலம் மற்ற மொழிகளி​லும் பிரபல​மானவர், மலை​யாள நடிகர் ஸ்ரீநாத் பாசி.

இவர் தமிழிலும் நடித்து வரு​கிறார்.

இவர் தற்​போது நடித்​துள்ள ‘அவரச்சன் அண்ட் சன்ஸ்​’என்ற மலை​யாளப் படத்​தின் புரமோஷன் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றார்.

அப்​போது தனது மனைவி ரீது சக்​காரி​யா​வைப் பிரிந்​து​விட்​ட​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

இரு​வரும் கடந்த 2016-ம் ஆண்டு காதலித்​துத் திரு​மணம் செய்​து ​கொண்​டனர்.

கருத்​து​வேறு​பாடு காரண​மாகக் கடந்த 2024-ம் ஆண்டு தனித்​தனி​யாக வாழத் தொடங்​கிய​தாக​வும் தற்​போது சட்​டரீ​தி​யாக வி​வாகரத்து பெற்​று​விட்​ட​தாக​வும் ஸ்ரீநாத் பாசி தெரி​வித்​துள்​ளார்​.

தற்​போது பெற்​றோருடன்​ வசித்​து வரும்​ அவர்​ வி​வாகரத்​துக்​கான ​காரணத்​தைத்​ தெரிவிக்​கவில்​லை.

3

கருத்துக்கள்