News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

தற்கொலைக்கு முயன்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன்

18 Aug, 2026 — 04:28 PM
தற்கொலைக்கு முயன்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன்

'பிரேமம்', 'கொடி', 'டிராகன்', 'பைசன்' போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன், ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தான் கடந்த 2 ஆண்டுகளாக எதிர்கொண்ட கடுமையான மன அழுத்தம் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த உறவு குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.

கடந்த காலத்தில் தான் சந்தித்த மோசமான உறவினால் கடுமையான மன உளைச்சல், பதற்றம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த மன அழுத்தத்தின் காரணமாகத் தனது உடல் எடை கணிசமாகக் குறைந்ததாகவும், இரவுகளில் பல மணி நேரம் அழுதுவிட்டு மறுநாள் காலையில் படப்பிடிப்பில் மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்க வேண்டிய சூழல் இருந்ததாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

அதிகப்படியான மன உளைச்சலால் அவரது கண்ணீர்க் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை வரை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தன் வாழ்வில் நடந்த இந்த மோசமான காலகட்டத்தில் இருந்து முற்றிலும் குணமாகி மீண்டு வந்த பிறகே, இது குறித்துப் பேச முன்வந்ததாக அனுபமா தெளிவுபடுத்தியுள்ளார்.

நச்சுத்தன்மை வாய்ந்த உறவுகளில் சிக்கித் தவிக்கும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே தனது அனுபவத்தைப் பகிர்வதாகக் கூறியுள்ள அவருக்கு, சமூக வலைத்தளங்களில் திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

2

கருத்துக்கள்