News & Ad contact: 75025 54555
தூத்துக்குடி - மும்பை இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு :
கோடை விடுமுறை கால நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தூத்துக்குடி மற்றும் மும்பை (CSMT) இடையே சிறப்பு ரயில்கள் (14 சேவைகள்) இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
வண்டி எண் 01005 (மும்பை - தூத்துக்குடி): ஏப்ரல் 21 முதல் ஜூன் 2 வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நள்ளிரவு 00:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11:30 மணிக்குத் தூத்துக்குடி வந்தடையும்.
வண்டி எண் 01006 (தூத்துக்குடி - மும்பை): ஏப்ரல் 22 முதல் ஜூன் 3 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 03:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 06:00 மணிக்கு மும்பை சென்றடையும்.
நிறுத்தங்கள்: இந்த ரயில் தாதர், கல்யாண், புனே, சோலாப்பூர், குண்டக்கல், பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்), சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியிலிருந்து மும்பை செல்லும் பயணிகளுக்கு இந்த நேரடிச் சிறப்பு ரயில் மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
4
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-