News Image
பின்தங்கியுள்ள ஓட்டப்பிடாரம் தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதே எனது லட்சியம் : நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் பிரச்சாரம் :

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் (NMEK) கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன், ஓட்டப்பிடாரம் தொகுதியில் தீவிரமாகப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் வாக்குகள் சேகரிக்கையில், "ஓட்டுக்கு பணம் கிடையாது.

இலவசமாக எதுவும் கொடுக்க மாட்டேன்.

ஆனால் இலவசமாக தரமான கல்வி, தார் சாலைகள், சிறப்பான மருத்துவம், வளமான விவசாயம், அனைவருக்கும் வீடுகள், தடையின்றி மின்சாரம் போன்றவற்றை கொடுப்பேன் என திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இலவசங்களை அறிவிக்காமல் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மட்டுமே செய்து தருவதாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள கிராம மக்களை நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்து மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்" என்று உறுதியளித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இதனால் தொகுதி மக்கள் தற்போது sசிந்திக்கத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே மாறி மாறி வாக்களித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஓட்டப்பிடாரம் தொகுதி பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

அதனால் ஒரு மாற்றம் வேண்டும் எனவும் மக்கள் பிரதிநிதியாக இல்லாமலேயே, ஆனால் மக்கள் பிரச்சனைக்காக வழக்கறிஞர் என்ற அடிப்படையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அருணா தேவி ரமேஷ் பாண்டியனுக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது என்று கூறப்படுகிறது.

நைனாபுரம், வேலாயுதபுரம், சாமிநத்தம், நடுவக்குறிச்சி, இந்திராநகர், முப்பிலிவெட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று மைக் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறசெய்ய வேண்டும் என தீவிரமாக பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலம் போன்ற பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியும் வாக்குசேகரித்தார்.

"கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்கள் தேவைகளை நிறைவேற்றுவேன்.எனவே இந்த ஒருமுறை உங்களுக்காக உழைப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்" என பேசினார்.

பெண்கள், இளைஞர்கள், பெரியோர்கள் இவருக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன், நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள், உட்பட ஏராளமானோர்.

கிராமங்கள்



26

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad