News & Ad contact: 75025 54555
ஏரல் அருகே பெண்ணைக் கத்தியால் குத்தி நகையைப் பறித்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை : தனியார் பேருந்தில் 2பேரிடம் ரூ.37லட்சம் பறிமுதல்:
தங்கம்: ₹ Rs.14210
வெள்ளி: ₹ 275
News Image
சைக்கிளில் சென்று வீதிவீதியாக விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் :

தூத்துக்குடி மாநகரில் பல்வேறு கட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் முத்துநகர் கடற்கரை, பூங்கா, ஆகிய இடங்களில் காலையில் வாக்கிங் செல்லும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அதுபோல்  பொது இடங்களில் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில்  தூத்துக்குடி முன்னாள் மாமன்ற உறுப்பினரும், தவெக பகுதி செயலாளர் ஆனந்தகுமார் ஏற்பாட்டில் திரவியபுரம், பொன்னகரம், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணராஜபுரம், பார்வதிஅம்மன் கோவில்தெரு, ஆகியபகுதிகளில் பகுதி செயலாளர் ஆனந்தகுமாரின் இரண்டு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வேட்பாளர் ஸ்ரீநாத்  வீதிவீதியாக வாக்கு சேகரித்தார்.

பின்னர் விஜய் ஸ்டைலில் சைக்கிளிலும் சென்று விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மாவட்ட செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல்ராஜ், பகுதி செயலாளர் ஆனந்த் குமார், பொருளாளர் சரவண்ன், வட்டசெயலாளர் நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தின் போது அனைத்து வார்டு பகுதிகளிலும் பெண்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad