News & Ad contact: 75025 54555
ஏரல் அருகே பெண்ணைக் கத்தியால் குத்தி நகையைப் பறித்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை : தனியார் பேருந்தில் 2பேரிடம் ரூ.37லட்சம் பறிமுதல்:
தங்கம்: ₹ Rs.14210
வெள்ளி: ₹ 275
News Image
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏப்.20-ம் தேதி தூத்துக்குடி வருகை: ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம் :

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 20 (திங்கட்கிழமை) அன்று தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் ஒரே நாளில் மூன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றுகிறார்.

பயணத் திட்டம் : டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10:45 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தனது பயணத்தைத் தொடங்குகிறார்: குளச்சல் (கன்னியாகுமரி): முற்பகல் 11:30 மணிக்குக் குளச்சலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

நாங்குநேரி (திருநெல்வேலி): பிற்பகல் 01:00 மணிக்கு நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.

ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி): பிற்பகல் 02:25 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் இறுதிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

மாலை 03:50 மணிக்குத் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் அவர் மீண்டும் டெல்லிக்குத் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி விமான நிலைய பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



5

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad