News Image
தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோடைகால கபடி பயிற்சி

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கபாடி கோடைகால பயிற்சியை முன்னிட்டு பயிற்சிக்கான மாணவிகள் தேர்வு நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 87 மாணவிகள் கலந்து கொண்டனர்.மேலும் கடந்த ஆண்டு 14 வயதுக்கு உட்பட்ட மாநில அளவிலான கபாடி போட்டியில் தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மூன்றாம் இடம்பிடித்து வெற்றி பெற்றனர் .

கோடைகால பயிற்சிக்கான மாணவிகள் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு தொடர்ந்து 15 நாட்கள் உதவி செய்த தாரணி பவுண்டேஷன் சேர்மன் போஜராஜனுக்கு பள்ளித் தாளாளர் சகோ.பெர்னத் மேரி, தலைமையாசிரியர் சகோ.சகாய ஹேமலதா ஜெயந்தி நன்றி கூறினார்.

சிறப்பு விருந்தினர்களை வரவேற்க்கும் விதமாக உடற்கல்வி ஆசிரியை சில்வா பர்னாண்டோ, துத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடி கழக செயலளர் (பொறுப்பு) மைக்கேல், உதவி செயலாளர் சசி ,சண்முக சுந்தரம் ,தாரணி ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி கூறினார்கள்.



2

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad