News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

ஜூனியர் ஹாக்கியில் இந்தியா வெற்றி; 55 ரன்களில் சுருண்ட பாக். | ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப் :

06 Sep, 2026 — 06:38 PM
ஜூனியர் ஹாக்கியில் இந்தியா வெற்றி; 55 ரன்களில் சுருண்ட பாக். | ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப் :

ஆசிய ஜூனியர் கோப்பை ஹாக்கி தொடர் சீனா​வின் மோகி நகரில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய ஆடவர் ஜூனியர் அணி தனது முதல் ஆட்​டத்​தில் நேற்று இந்​தோ​னேஷி​யாவை எதிர்த்து விளை​யாடியது.

இதில் இந்​திய அணி 14-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

இந்​திய அணி சார்​பில் பிரப்​தீப் சிங் 5 கோல்​கள் அடித்து அசத்​தி​னார்.

கேப்​டன் அன்​மோல் 4 கோல்​களை​யும், அஜீத் யாதவ் 3 கோல்​களை​யும் அடித்​தனர்.

மேலும் ஹர்​பால், அஷு மவுர்யா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர்​.

மகளிருக்கான போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.

லண்​டன் கிளாசிக் ஸ்கு​வாஷ் தொடரில் கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் அனஹத் சிங் தோல்வி அடைந்​தார்.

லண்​டனில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் மகளிர் ஒற்​றையர் கால் இறுதி சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனஹத் சிங், 4-வது இடத்​தில் உள்ள மலேசி​யா​வின் சிவசங்​கரி சுப்​பிரமணி​யத்​துடன் மோதி​னார்.

இதில் அனஹத் சிங் 4-11, 4-11 என்ற நேர் செட் கணக்​கில் தோல்வி அடைந்​தார்.

தெற்கு ரயில்வே அணி வெற்றி: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தமிழ் ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் தெற்கு ரயில்வே - இந்தியன் வங்கி அணிகள் மோதின.

இந்த மோதலில் தெற்கு ரயில்வே 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தெற்கு ரயில்வே அணி தரப்பில் தினேஷ் குமார் 2 கோல்களும் (25 மற்றும் 44-வது நிமிடங்கள்), மகேந்திர சிங் (12-வது நிமிடம்), சண்முகம் (57-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

ஐஎஸ்​எல் கால்​பந்து தொடர் வரும் அக்​டோபர் 10-ம் தேதி தொடங்கி அடுத்த வருடம் மே மாதம் வரை நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

8 மாதங்​கள் நடை​பெறும் இந்​தத் தொடரில் மொத்​தம் 163 ஆட்​டங்​கள் நடை​பெற உள்​ளன.

வழக்​க​மான முறை​யில் உள்​ளூர் மைதானம், வெளி​மாநில மைதானம் பாணி​யில் போட்​டிகள் நடத்​தப்பட உள்​ளன.

ஜாம்​ஷெட்​பூர் அணிக்கு பதிலாக சர்ச்​சில் பிரதர்ஸ் அணி சேர்க்​கப்​பட்​டுள்​ளது.

பெங்​களூரு எஃப்​சி, சென்​னை​யின் எஃப்​சி, சர்ச்​சில் பிரதர்ஸ் எஃப்​சி, ஈஸ்ட் பெங்​கால் எஃப்​சி, எஃப்சி கோவா, இன்​டர் காஷி எஃப்​சி, கேரளா பிளாஸ்​டர்ஸ் எஃப்​சி, மோகன் பகான் சூப்​பர் ஜெயண்ட், மும்பை சிட்டி எஃப்​சி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்​சி, ஒடிசா எஃப்​சி, பஞ்​சாப் எஃப்​சி, ஸ்போர்ட்​டிங் கிளப் டெல்லி ஆகிய 13 அணி​கள் இந்த லீக் போட்​டி​யில் பங்​கேற்​க​வுள்​ளன.

மகளிருக்​கான ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் துபா​யில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய மகளிர் அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் பாகிஸ்​தானுடன் மோதி​யது.

முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் மகளிர் அணி 18.1 ஓவர்​களில், 55 ரன்​களுக்கு சுருண்​டது.

அதி​கபட்​ச​மாக ஷவால் ஜுல்ஃபிகர் 14, முனீபா அலி 13 ரன்​கள் சேர்த்​தனர்.

மற்ற எந்த பேட்​டர்​களும் இரட்டை இலக்கை ரன்னை எட்​ட​வில்​லை.

இந்​திய மகளிர் அணி தரப்​பில் சரணி, பிரேமா ராவத் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

தீப்தி சர்மா 2 விக்​கெட்​களை​யும், ஷபாலி வர்மா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

இதையடுத்து 56 ரன்​கள் இலக்​குடன் இந்​திய மகளிர் அணி பேட்​டிங் செய்தது.

8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.

4

கருத்துக்கள்