News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

தங்கம் வென்ற மதுரை கிரிக்கெட் வீராங்கனைக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய் அறிவிப்பு :

22 Sep, 2026 — 03:40 PM
தங்கம் வென்ற மதுரை கிரிக்கெட் வீராங்கனைக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய் அறிவிப்பு :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மதுரை கிரிக்கெட் வீராங்கனைக்கு ரூ.

75 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது.

பின்னர், 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்களுக்கு சுருண்டது.

இதனால், இந்திய அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த நிலையில், தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், அவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.

75 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.

75 லட்சம் வழங்கப்படும்.

இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும்.

கமலினியின் இந்த வெற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.

இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

1

கருத்துக்கள்