News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

நேபாள வெள்ளப் பேரிடர்: இதுவரை 12,000 பேர் மீட்பு; 1,000-ஐ கடந்தது உயிரிழப்பு :

01 Sep, 2026 — 06:54 PM
நேபாள வெள்ளப் பேரிடர்: இதுவரை 12,000 பேர் மீட்பு; 1,000-ஐ கடந்தது உயிரிழப்பு :

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

நேபாளத்தின் வடக்கே திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனி பாறைகள் சரிந்ததால் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி போட்டேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

சுனாமியைப் போன்று தாக்கிய இந்த ஆற்று வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

பல்வேறு நீர்மின் திட்டங்களும் சேதமடைந்தன.

இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி ஏராளமான பொதுமக்களும், கயிலாய யாத்திரை மேற்கொண்ட பக்தர்களும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் குறித்து நேபாளத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளது.

சித்வான், நவல்ப்பராசி கிழக்கு, நவல்ப்பராசி மேற்கு, நுவாகோட், கோர்கா, தடிங், ரசுவா, தனஹுன் ஆகிய எட்டு மாவட்டங்களில் இருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் 4,000 பேரை இன்னும் காணவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

கருத்துக்கள்