ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய கடல்பகுதிகளில் நடந்த இருவேறு சம்பவங்களில், 22 இந்தியர்களுடன் சென்ற 2 வணிக கப்பல்களை கடல் கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஒன்றிய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “எரித்தியா நாட்டு கொடியுடன் எம்.டி.
சிபு 1 என்ற எண்ணெய் கப்பல், கடந்த 20ம் தேதி ஏமன் கடற்கரையில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, ஏடன் வளைகுடாவில் ஆயுதம் ஏந்திய கடல் கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்டது.
இந்த கப்பலில் 20 பணியாளர்கள் இருந்தனர்.
அவர்களில் 16 பேர் இந்தியர்கள்.
அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கேமரூன் நாட்டு கொடியுடன் லுட்டுஃப் என்ற சரக்கு கப்பல் கடந்த 17ம் தேதி சோமாலியாவின் புன்ட்லேண்ட் கடற்கரை பகுதியருகே கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.
இந்த கப்பலில் 6 இந்தியர்கள் உள்பட 10 பணியாளர்கள் இருந்தனர்.
ஏகே 47 துப்பாக்கிகளுடன் 2 சிறிய படகுகளில் வந்த 8 கடல் கொள்ளையர்கள், கப்பலை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கடத்தி சென்றனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என தெரிவித்தார்.
கருத்துக்கள்