News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

இந்தோனேஷியா நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

17 Aug, 2026 — 03:21 PM
இந்தோனேஷியா நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

இந்தோனேஷியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரெஸ் தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

புளோரெஸ் தீவில் சில தினங்களுக்கு முன்பு ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான மிகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் அதிர்வால் அப்பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

மேலும் பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுக் கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

கட்டட இடிபாடுகளில் சிக்கி முதற்கட்டமாக 47 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால், மீட்புக் குழுவினர் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

4

கருத்துக்கள்