News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

குத்துச்சண்டையில் 3 பதக்கம் உறுதி

29 Jul, 2026 — 04:05 PM
குத்துச்சண்டையில் 3 பதக்கம் உறுதி

குத்துச்சண்டையில் மகளிருக்கான 54கிலோ எடை பிரிவில் 22 வயதான இந்தியாவின் பிரீத்தி பவார் கால்இறுதியில் வடஅயர்லாந்தின் நிக்கோல்கிளாடை எதிர்கொண்டார்.

3 சுற்றுகளிலும் முழு ஆதிக்கம் செலுத்திய பிரீத்தி 5-0 என வென்றுஅரையிறுதிக்குள்நுழைந்தார்.

அரையிறுதியில் சாம்பியா நாட்டின் கேத்தரின் முவாபேயை எதிர்கொள்ளவுள்ளார்.

மகளிர் 60 கிலோ எடை பிரிவில் ஆசிய சாம்பியனான பிரியா, இந்தியாவின் பிரியா கங்காஸ், கால்இறுதியில் ஸ்காட்லாந்தின் நியாம்மின்செலை 4-1 என வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்களுக்கான 55 கிலோ எடைபிரிவில் ஜடுமணி சிங், கால்இறுதியில் ஜாம்பியாவின் முவாலேவை 5-0 என சாய்த்து அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

அரையிறுதியில் இவர் நமீபியாவின் பிலிப் ஹவுசெப்பை எதிர்கொள்ள உள்ளார்.

காமன்வெல்த் குத்துச்சண்டை விதிகளின்படி அரையிறுதியில் தோல்வியடையும் இருவருக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும்.

இதனால் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதியாகி உள்ளது.

3

கருத்துக்கள்