News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

மெஸ்ஸி உலக சாதனை : பீலேயின் சாதனை முறியடிப்பு : கால்பந்து போட்டியில் புதிய வரலாறு :

16 Jul, 2026 — 01:03 PM
மெஸ்ஸி உலக சாதனை : பீலேயின் சாதனை முறியடிப்பு : கால்பந்து போட்டியில் புதிய வரலாறு :

அமெரிக்காவில் நடைபெற்று வரும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து வரலாற்றில் எவரும் எட்டாத மகுடத்தைச் சூடவுள்ளார்.

ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றிலேயே மூன்று வெவ்வேறு இறுதிப்போட்டிகளில் விளையாடும் உலகின் முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை மெஸ்ஸி படைக்கவிருக்கிறார்.

கால்பந்து உலகின் ஜாம்பவானான பிரேசிலின் பீலே தனது வாழ்நாளில் 3 உலகக் கோப்பைகளை (1958, 1962, 1970) வென்றுள்ளார்.

எனினும், 1962-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் அந்த ஆண்டின் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது.

ஆனால், லியோனல் மெஸ்ஸி ஏற்கனவே 2014 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளின் உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காகக் களம் கண்டுள்ளார்.

தற்போது மீண்டும் 2026 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கும் அர்ஜென்டினா தகுதி பெற்றுள்ளதால், அதிகாரப்பூர்வமாக 3 உலகக் கோப்பை ஃபைனல்களில் விளையாடும் முதல் கால்பந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை மெஸ்ஸி தனது வசம் ஆக்கியுள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

தற்போது மீண்டும் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், மெஸ்ஸியின் இந்த அரிய சாதனை உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி மெஸ்ஸி தனது சர்வதேச கால்பந்து பயணத்திற்கு மேலும் ஒரு தங்கப் பக்கத்தைச் சேர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எகிறியுள்ளது.

2

கருத்துக்கள்