ஐடிஐ/டிப்ளமோ/ பி.இ., படித்தவர்களுக்கு வாய்ப்பு பணியிடங்கள் விவரம்: 1.
டெக்னீசியன் கிரேடு-1 (சிக்னல்): 323 இடங்கள்.
சம்பளம்: ரூ.29,200.
வயது: 18 முதல் 33க்குள்.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல்/எலக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஎஸ்சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும் 2.
டெக்னீசியன் கிரேடு- III.
6242 இடங்கள்.
சம்பளம்: ரூ.19,900.
வயது: 18 முதல் 30க்குள்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சிக்னல் மெயின்டெனர்/டிராக் மிஷின்/பிளாக்ஸ்மித்/பிரிட்ஜ்/கேரேஜ் மற்றும் வேகன்/ டீசல் (எலக்ட்ரிக்கல்)/ டீசல் (மெக்கானிக்கல்)/எலக்ட்ரிக்கல் (டிஆர்எஸ்)/எலக்ட்ரிக்கல் (ஜிஎஸ்)/ எலக்ட்ரிக்கல் (டிஆர்டி)/இஎம்யூ/ பிட்டர் (ஓஎல்)/ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங்/ரிவெட்டர்/எஸ் அண்ட் டி/வெல்டர் (ஓஎல்)/ கிரேன் டிரைவர்/கார்பென்டர் (வொர்க்ஷாப்)/ டீசல் (எலக்ட்ரிக்கல்) (வொர்க்ஷாப்)/டீசல் மெக்கானிக்கல் வொர்க்ஷாப் (பியூ அண்ட் டபிள்யூஎஸ்)/எலக்ட்ரிக்கல் வொர்க்ஷாப் (பவர் அண்ட் டிஎல்)/எலக்ட்ரிக்கல் (பியூ அண்ட் வொர்க்ஷாப்)/பிட்டர் (பியூ அண்ட் டபிள்யூ எஸ்)/மிஷினிஸ்ட் (வொர்க்ஷாப்)/மெக்கானிக்கல் (பியூ அண்ட் டபிள்யூஎஸ்)/பெயின்டர் (வொர்க்ஷாப்)/டிரிம்மர் (வொர்க்ஷாப்/வெல்டர் (பியூ மற்றும் டபிள்யூ எஸ்)/ வெல்டர் (வொர்க்ஷாப்) ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1.7.2026 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும்.
எஸ்சி/எஸ்டி/ஒபிசியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஒன்றிய அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500/-.
பொருளாதார பிற்பட்டோர்/எஸ்சி/எஸ்டி/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினர்/சிறுபான்மையினருக்கு ரூ.250/- மட்டும்.
இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.rrbapply.gov.in அல்லது www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.07.2026.
கருத்துக்கள்