News Image
சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் வானதி சீனிவாசன் - உலியம்பாளையத்தில் உற்சாக வரவேற்பு

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், முழுமையாகக் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.

வலது காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக வானதி சீனிவாசன் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் இருந்த காலத்திலும், தனது உடல்நிலை குறித்து அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுத் தொண்டர்களையும் வாக்காளர்களையும் உற்சாகப்படுத்தி வந்தார்.

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் இருந்தபோது, அவரது குடும்பத்தினர் தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொண்டனர்: தொகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, கடந்த 5 ஆண்டுகளில் வானதி சீனிவாசன் செய்த மக்கள் நலத்திட்டங்களை விளக்கி 'தாமரை' சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

மகன்கள் ஆதர்ஷ், கைலாஷ் ஆகிய இருவரும் இளைஞர் படையுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

"அம்மா விரைவில் குணமாகி மக்கள் பணிக்கு திரும்புவார்" என அவர்கள் வாக்காளர்களுக்கு உறுதி அளித்தனர்.

சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறிய வானதி சீனிவாசன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையடுத்து, தொண்டாமுத்தூர் அருகே உள்ள உலியம்பாளையத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு அவர் சென்றார்.

அங்கு அவருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

பாஜக தொண்டர்கள் மற்றும் ஊர் மக்கள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நீண்ட ஓய்விற்குப் பிறகு வானதி சீனிவாசன் மீண்டும் தேர்தல் களத்தில் நேரடியாகப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதால் கோவை வடக்கு தொகுதி பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad