News & Ad contact: 75025 54555
தூத்துக்குடி சி.வ.மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா :
தூத்துக்குடியில் நூறு ஆண்டுகளைக் கடந்த சி.வ.
மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா என முப்பெரும் விழா மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தூத்துக்குடி நகர்ப்புற வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜூலியா விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ ) பார்வதி, ஆசிரியர் பயிற்றுநர் கணபதி, மற்றும் கணக்காளர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
சி.வ.குடும்பத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரம நாயகம் குத்துவிளக்கு ஏற்றினார்.
விளையாட்டுப் போட்டி, மாறுவேடப் போட்டி, மாணவரின் கல்விசார் செயல்பாடுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதன் பிறகு மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் தூத்துக்குடி நகர்புற வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி யுகேஜி மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு வழங்கி கெளரவித்தார்.
ஆசிரியை ஜான்சி நன்றியுரை வழங்கினார்.
ஆசிரியை பார்வதி விழாவினை தொகுத்து வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் த கனிச்செல்வி,ஹெலன் சந்திரா காந்தா, சொர்ணலதா, மேக்டலின் செல்வி அமுதா, கனகவள்ளி,மைதீன் பிவீ, பாக்கியலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
நிறைவாக நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவுற்றது.
1
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-