News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் வினாடி வினா நிகழ்ச்சி :

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று FIZZOREE 2026 வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மீன்வளக் கல்லூரியின் இலக்கிய சங்கம் கல்லூரிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டியை நடத்தியது.

இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு கல்லூரிகள் பங்கேற்றன.

இறுதி போட்டிகளுக்கு 5 கல்லூரிகள் தேர்வு பெற்றன.

திருவண்ணாமலை வாழவச்சனூர், மாவட்டம் டெல்பினஸ் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கோப்பையை பெற்றது.

மாலையில் நடைபெற்ற விழாவில் இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாணவர் சங்கத் துணைத் தலைவர் பா.கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் சண்முகம் தலைமையுரை ஆற்றினார்.

தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நிறைவாக இலக்கிய சங்க செயலாளர் அனாஸ் நன்றியுரை ஆற்றினார்.



1

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad