News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
இருளில் மூழ்கிக் கிடக்கும் திருச்செந்தூர் பிரதான சாலை : சீர் செய்யத் தெற்கு பகுதி மக்கள் கோரிக்கை :

தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலையில் பல நாட்களாக சாலை நடுவே உள்ள விளக்குகள் எரியாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக, இந்தச் சாலை திருச்செந்தூர் செல்லும் பிரதான வழித்தடமாகும்.

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பக்தர்கள் பயணம் செய்யும் இந்த சாலை, தற்போது முழுமையான இருளில் மூழ்கி காணப்படுகிறது.

உப்பாற்று ஓடை முதல் முத்தையாபுரம் சந்திப்பு வரை  இந்த பகுதியில், இரவு நேரங்களில் பயணம் செய்வது மக்கள் உயிருக்கு ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது.

பெண்கள், மாணவர்கள், வேலை முடித்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் அனைவரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருள் சூழ்ந்த இந்த சாலை விபத்துகள், திருட்டு மற்றும் பிற குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாகவும் யோசிக்கும் மக்கள் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.



5

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad