News & Ad contact: 75025 54555
தமிழக வாழ்வுரிமை கட்சி தூத்துக்குடி வேட்பாளர் கிதர் பிஸ்மி : 10 வாக்குறுதிகள் அறிவிப்பு
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் என்.ஏ.கிதர் பிஸ்மி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
விரைவில் நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் என்.ஏ.கிதர் பிஸ்மி கட்சித் தலைவர் தி.வேல்முருகனால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர், நீட் தேர்வு ரத்து மற்றும் தமிழகத்தின் மாநில உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுதல்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல் மற்றும் அனைவருக்கும் சமமான கல்வி.
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல் மற்றும் தூத்துக்குடி இளைஞர்களுக்கு உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
கனிமவளக் கொள்ளையைத் தடுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத தூத்துக்குடியை உருவாக்குதல் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்துள்ளார்.
மக்களின் குரலாய் சட்டமன்றத்தில் ஒலிக்க தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என வேட்பாளர் என்.ஏ.கிதர் பிஸ்மி தொகுதி மக்களிடம் வாக்குச் சேகரித்து வருகிறார்.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-