News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துத் தாய் தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணை :

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக, தனது இரண்டு குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (35).

இவர் அப்பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி வினோதினி (32).

இந்தத் தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோதினி, விபரீத முடிவெடுத்துள்ளார்.

வீட்டில் இருந்த குளிர்பானத்தில் எலி மருந்தை (Rat Poison) கலந்து, தனது இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டுத் தானும் அதைக் குடித்துள்ளார்.

சிறிது நேரத்தில் மூன்று பேரும் மயங்கி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக அவர்களை மீட்டுச் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துக் கோவில்பட்டி மேற்குப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாகத் தாயே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவில்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad