News & Ad contact: 75025 54555
அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
நிதி ஆண்டு கணக்கு முடித்தல் மற்றும் அடுத்தடுத்து வரும் அரசு விடுமுறைகள் காரணமாக, மார்ச் 31 முதல் ஏப்ரல் 3 வரை அஞ்சலகங்களில் பணப் பரிவர்த்தனை சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் எஸ்.
சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மார்ச் 31 (செவ்வாய்): மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அஞ்சலகங்களுக்கு அரசு விடுமுறை.
ஏப்ரல் 1 & 2 (புதன், வியாழன்): பழைய நிதி ஆண்டு கணக்கு முடித்தல் மற்றும் புதிய நிதி ஆண்டு தொடக்கப் பணிகள் நடைபெறுவதால், அஞ்சலகங்களில் எந்தவிதமான பணப் பரிவர்த்தனைகளும் (பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல்) நடைபெறாது.
டிஜிட்டல் சேவைகள்: ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அஞ்சலக இணையதள வங்கி (Internet Banking) மற்றும் கைபேசி வங்கி (Mobile Banking) சேவைகளும் செயல்படாது.
ஏப்ரல் 3 (வெள்ளி): புனித வெள்ளியை முன்னிட்டு அஞ்சலகங்களுக்கு விடுமுறை.
பணப் பரிவர்த்தனைகள் நடைபெறாத ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், தபால் புக்கிங் (Post Booking) மற்றும் பட்டுவாடா (Delivery) சேவைகள் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்: தொடர் விடுமுறை மற்றும் கணக்கு முடித்தல் பணிகளால் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படவுள்ளதால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பணத் தேவைகளை முன்னரே திட்டமிட்டு அஞ்சலகங்களை அணுகிச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
5
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-