News & Ad contact: 75025 54555
தட்டப்பாறை அருகே காற்றாலை பராமரிப்பில் இருந்தபோது 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு :
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே காற்றாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபர், சக ஊழியர் தவறவிட்ட கருவி தலையில் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தன்சிங் தாக்கூர் (32).
இவர் 'யாஷ் இன்ஜினியரிங்' என்ற துணை ஒப்பந்த நிறுவனத்தின் மூலம், தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 'லீப் கிரீன்' காற்றாலை நிறுவனத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக வந்திருந்தார்.
நேற்று வழக்கம்போல் காற்றாலை கோபுரத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
தன்சிங் தாக்கூர் சுமார் 30 மீட்டர் உயரத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு மேலே உயரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள், கையில் வைத்திருந்த ஒரு கருவியை எதிர்பாராதவிதமாகத் தவறி விட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தக் கருவி நேராகக் கீழே பணியில் இருந்த தன்சிங் தாக்கூரின் தலையில் பலமாகத் தாக்கியது.
இதில் நிலைதடுமாறிய அவர், சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தட்டப்பாறை போலீசார், உயிரிழந்த தன்சிங் தாக்கூரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பு உபகரணங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-