சென்னை மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ பாபு காலமானார்.
அவருக்கு வயது 75.
இன்று பிற்பகல் 2.24 மணிக்கு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் முழுவதும் வி.எஸ்.பாபு பிரபலம் அடைந்தார்.
ஒரு மாதமாக நடந்து வந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற அவருக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.
செப்டம்பர் 23-ம் தேதி முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு சென்று பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார்.
பல நாட்களாகவே அவரது உடல்நிலை குறித்த எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவில்லை.
அந்தச் சூழலில், கொளத்தூர் தவெக எம்எல்ஏ.பாபுவின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று பிற்பகல் 2.24 மணிக்கு வி.எஸ்.பாபு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தனது அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்