News & Ad: 75025 54555
தங்கம்:
₹ 11465
வெள்ளி:
₹ 175

பழைய நகைக்குப் புதிய நகை தருவதாக 214 பவுன் மோசடி: பட்டறை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு :

20 Nov, 2026 — 11:37 AM
பழைய நகைக்குப் புதிய நகை தருவதாக 214 பவுன் மோசடி: பட்டறை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு :

பழைய நகைக்குப் பதிலாகப் புதிய நகை செய்து தருவதாகக் கூறி, 43 பேரிடம் 214 பவுன் நகைகளை மோசடி செய்த நகைப் பட்டறை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்தூர் மேலரதவீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்கிற ரவி.

இவர் அப்பகுதியில் நகைப் பட்டறை நடத்தி வருகிறார்.

இவரிடம் மேலஆத்தூரைச் சேர்ந்த ஆறுமுககுமார் (50) உட்பட 43 பேர், தங்களது பழைய தங்க நகைகளைக் கொடுத்துப் புதிய நகைகளாகச் செய்து தருமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்துப் பழைய நகைகளைப் பெற்றுக்கொண்ட சுப்பிரமணியன், வாடிக்கையாளர்களுக்குப் புதிய நகைகளைச் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி ஏமாற்றியுள்ளார்.

இதன் மூலமாக அவர் ரூ.26 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான சுமார் 214 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நகைப் பட்டறை உரிமையாளர் சுப்பிரமணியன் என்கிற ரவி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11

கருத்துக்கள்