News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

தூய மரியன்னை கல்லூரியில் எச்.ஐவிழிப்புணர்வு ஃப்ளாஷ் மாப் - மாணவிகள் அசத்தல்!

22 Sep, 2026 — 04:10 PM
தூய மரியன்னை கல்லூரியில் எச்.ஐவிழிப்புணர்வு ஃப்ளாஷ் மாப் - மாணவிகள் அசத்தல்!

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம் (DAPCU) மற்றும் செஞ்சிலுவை மன்றம் ஆகியவை இணைந்து “Beat HIV, Beat Stigma” என்ற தலைப்பில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக, எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பங்கேற்புடன் பாடல் மற்றும் நடனம் (Flash Mob) நிகழ்ச்சி நடத்தப்பட்டு, எச்.ஐ.வி./எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்த முக்கியக் கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கத்தின் (DAPCU) மாவட்டத் திட்ட மேலாளர் வேலையா சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர், எச்.ஐ.வி.

பரவும் வீரியம், தடுக்கும் வழிமுறைகள் மற்றும் எச்.ஐ.வி.

தொற்றுடன் வாழ்பவர்களிடம் பாகுபாடின்றி அன்புடனும் மனிதநேயத்துடனும் நடந்து கொள்வதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கினார்.

மேலும், DAPCU மாவட்ட மேற்பார்வையாளர் மகாராஜா மகேஷ், புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் ICTC ஆலோசகர் பானுமதி நாச்சியார் ஆகியோர் சிறப்பு வள நபர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வுக் கருத்துகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சி, கல்லூரிச் செயலர் குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர் சி.

ஷிபானா, துணை முதல்வர் சி.சு.

எழிலரசி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பானுமதி, கீதா மகேஸ்வரி ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர்கள் ஷெர்லி கிராஸ், ஜான்சி ராணி மற்றும் சுஜிதா ஆகியோர் செய்திருந்தனர்.

2

கருத்துக்கள்