News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

22ம் தேதி குஜராத் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு; தேசிய திரைப்பட விருது விழா; இனி மாநில நகரங்களிலும் நடத்த முடிவு :

09 Sep, 2026 — 07:35 PM
22ம் தேதி குஜராத் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு; தேசிய திரைப்பட விருது விழா; இனி மாநில நகரங்களிலும் நடத்த முடிவு :

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவானது இனி தலைநகர் டெல்லியைத் தவிர்த்து நாட்டின் பல்வேறு மாநில நகரங்களிலும் நடத்தப்படும் என்று ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியத் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 1954ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் நாட்டின் தலைநகரான டெல்லியிலேயே பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த இந்த விழாவை, இனி நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் நடத்த ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற நோக்கத்தின் அடிப்படையில், 2024ம் ஆண்டிற்கான 72வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் வருகிற 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்குகிறார்.

இந்த 72வது தேசிய விருதுகளில் ‘ஆர்டிகிள் 370’ சிறந்த திரைப்படமாகவும், ‘பங்கார்’ சிறந்த முழுநீளமற்ற படமாகவும், ‘ராம்-நாமி’ சிறந்த ஆவணப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

‘பிரமயுகம்’ படத்திற்காக மம்மூட்டி மற்றும் ‘சந்து சாம்பியன்’ படத்திற்காக கார்த்திக் ஆர்யன் ஆகியோருக்குச் சிறந்த நடிகருக்கான விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.

‘ஆர்டிகிள் 370’ படத்தில் நடித்த யாமி கவுதமுக்கு சிறந்த நடிகை விருதும், ‘சுவாதந்திரிய வீர் சாவர்க்கர்’ படத்தை இயக்கிய ரந்தீப் ஹூடாவுக்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் அமரன், கல்கி 2898 ஏடி, புஷ்பா 2, ஸ்ரீ 2 உள்ளிட்ட திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ள நிலையில், முதன்முறையாக சந்தாலி மொழி படத்திற்கும் கவுரவம் கிடைத்துள்ளது.

4

கருத்துக்கள்