News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

வோடோபோன்-ஐடியா நிறுவனத்திற்கு ரூ.363 கோடி ஜி.எஸ்.டி நிலுவை கேட்ட வழக்கில் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி

08 Sep, 2026 — 03:27 PM
வோடோபோன்-ஐடியா நிறுவனத்திற்கு ரூ.363 கோடி ஜி.எஸ்.டி நிலுவை கேட்ட வழக்கில் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி

கடந்த 2017ம் ஆண்டு வோடோபோன் மொபைல் சர்வீசஸ் நிறுவனம் தனது டெலிகாம் டவர் வணிகத்தை, ஏ.டி.சி டெலிகாம் உட்கட்டமைப்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.

இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 2018ல் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, வோடோபோன் மொபைல் சர்வீசஸ் நிறுவனம், ‘வோடபோன் இந்தியா’ மற்றும் ‘ஐடியா செல்லுலார்’ ஆகிய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது.

கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜி.எஸ்.டி புலனாய்வு தலைமை இயக்குநரகம் ஏற்கனவே செயல்பாட்டில் இல்லாத வோடோபோன் மொபைல் நிறுவனத்திற்கு ரூ.363 கோடி ஜி.எஸ்.டி வரி மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.

இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், அதேப்போன்று விற்கப்பட்ட வணிகத்திற்கு உள்ளீட்டு வரி வரவு கேட்டது செல்லாது எனக் கூறியும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் ஜிஎஸ்டி வரித்துறையின் நடவடிக்கைகளை ரத்து செய்வதாக கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒன்றியஅரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் என்.வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,\\” நிறுவனங்களின் இணைப்பிற்குப் பிறகு செயல்பாட்டில் இல்லாத ஒரு நிறுவனத்திற்கு எதிராக வரிக்கோரிக்கை நடவடிக்கைகளை எப்படித் தொடங்க முடியும்.

அது சாத்தியம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனக்கூறி, ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

3

கருத்துக்கள்