News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

பெண் வயிற்றில் 13 பேனாக்கள், 5 ஸ்பூன்கள், மெழுகுவர்த்தி: அறுவை சிகிச்சையின்றி டாக்டர்கள் அகற்றினர்

08 Sep, 2026 — 03:25 PM
பெண் வயிற்றில் 13 பேனாக்கள், 5 ஸ்பூன்கள், மெழுகுவர்த்தி: அறுவை சிகிச்சையின்றி டாக்டர்கள் அகற்றினர்

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட் நகரை சேர்ந்தவர் 33 வயது இளம்பெண்.

இவர் சில நாட்களுக்கு முன்பும் வயிற்று வலியால் வேதனையடைந்தார்.

இதனால் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

அப்போது அவரது வயிற்றில் பேனாக்கள், ஸ்பூன்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதை பார்த்த டாக்டர்கள் மற்றும் பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து டாக்டர் ராமச்சந்திர ரெட்டி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், நேற்று முன்தினம் அறுவை சிகிச்சையின்றி, எண்டோஸ்கோப்பிக் மூலம் வயிற்றில் இருந்த 13 பேனாக்கள், 5 ஸ்பூன்கள், 1 மெழுகுவர்த்தி ஆகியவற்றை அகற்றினர்.

சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இந்தபெண் இதேபோல் சில மாதங்களுக்கு முன் 4 பேனாக்களை விழுங்கியிருந்ததும் அவற்றை டாக்டர்கள் அகற்றியதும் தெரிய வந்தது.

3

கருத்துக்கள்