தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார் என CJP கட்சித் தலைவர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
-இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த CJP தலைவர் அபிஜீத் திப்கே; தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார்.
இதேபோல் நாட்டின் பிற மாநிலங்களிலும் குறிப்பிட்ட சில துறைகளில் முதலமைச்சர்களின் பணிகள் கவனிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, கேரள மாநிலத்தில் சுகாதாரத் துறையை சிறப்பாக வழிநடத்தியதற்காக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டத்தக்கவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் கல்வித் துறையில் மேற்கொண்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் மற்றும் சிறப்பான பணிகளுக்காக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் பாராட்டியுள்ளார்.
கருத்துக்கள்