News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் வாபஸ் :

21 Jul, 2026 — 05:21 PM
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் வாபஸ் :

தலைநகர் டெல்லியில் பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தொடர் போராட்டங்கள் திடீரென வன்முறையில் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக முடித்துக் கொண்டுள்ளார்.

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறேகுகளுக்குக் காரணமானவர்கள் மீது மத்திய அரசு மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார்.

சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த விபரீத சூழலைத் தவிர்க்க அவர் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

இதேபோன்று டெல்லியில் சோனம் வாங்சுக்குடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கேவும் தனது உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து தற்பொழுது முழுமையாக விலகியுள்ளார்.

தலைநகரில் நிலவும் அசாதாரண தட்பவெப்ப நிலை மாற்றங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் வன்முறைச் சம்பவங்கள் காரணமாகப் போராட்டக் களம் தற்காலிகமாக அமைதியடைந்துள்ளது.

தற்பொழுது உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ள போதிலும், மாணவர்களின் எதிர்கால நலனுக்காகவும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் வியூகங்களை எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

7

கருத்துக்கள்