News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

ஆசிரியர் பணிக்கான டிஎன் டெட்-2026 தேர்வு அறிவிப்பு

09 Apr, 2026 — 05:16 PM
ஆசிரியர் பணிக்கான டிஎன் டெட்-2026 தேர்வு அறிவிப்பு

தேர்வின் பெயர்: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தமிழ்நாடு டீச்சர்ஸ் எலிஜிபிலிட்டி டெஸ்ட்-2026).

தகுதி: அரசு பள்ளிகள்/அரசு உதவி பெறும் பள்ளிகள்/மாநகராட்சி பள்ளிகள்/ அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 01.09.2025 தேதிக்கு முன்னர் எஸ்ஜிடி/பிடி அசிஸ்டென்ட் கேடர் ஆசிரியராக பணி புரிந்திருக்க வேண்டும்.

1 பட்டப்படிப்புடன் பி.எட்., பட்டம் பெற்றவர்கள் டிஎன் டெட் தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வெழுதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரியும் தகுதியைப் பெறுவர்.

2 பிளஸ் 2 படித்து தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் டிஎன்டிடெட் தாள்-1 மட்டும் எழுத அனுமதிக்கப்படுவர்.

அவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரியலாம்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ‘ஆப்ஜக்டிவ்’ டைப் வகை கேள்விகளைக் கொண்ட டிஎன்டிடெட்-2026 தேர்வி்ல் கேட்டகரி வாரியாக அரசு நிர்ணயித்த கட்-ஆப் மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு டெட் தேர்வு தகுதிச் சான்று வழங்கப்படும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-.

அருந்ததியர்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.300/-.

இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

டெட் தேர்வு நடைபெறும் தேதி: முதல் தாள்- ஜூலை 4.

2ம் தாள்- ஜூலை 5.

www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.04.2026.

9

கருத்துக்கள்