தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றது.
தொடக்க நிகழ்வாக போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் மனநலன் சார்ந்த செய்திகளை மனநல மருத்துவர்.சிவசைலம் வழங்கினார்.
அடுத்த நிகழ்வாக போக்சோ (POCSO) பற்றிய விழிப்புணர்வு செய்திகளை வழக்கறிஞர்.சொர்ணலதா வழங்கினார்.
மேலும் அன்று காலை இந்நிகழ்வு தொடர்பாக நடைபெற்ற ஓவியப்போட்டி,வாசகம் எழுதும் போட்டி மற்றும் வினாடி – வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பள்ளிக் தலைமையாசிரியர் எமல்டா வெலன்சியா ஹெஸியா மாணவர்கள் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டிய உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு செய்தியை வழங்கினார்.இன்னர் வீல் கிளப் ஆப் தூத்துக்குடியின் பொருளாளர் ஜூடி மற்றும் செயலர் ரம்யா ஆகியோர் தொடுதல் (Good touch bad touch) பற்றிய விழிப்புணர்வு செய்தியை மாணவர்களுக்கு வழங்கினர்.
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ தொடர்பான பொறுப்பு ஆசிரியர்கள் அமலி மற்றும் மீனா ஆகியோர் தலைமையாசிரியரோடு இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கருத்துக்கள்