News & Ad: 75025 54555
தங்கம்:
₹ 11510
வெள்ளி:
₹ 175

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே லாரி மோதி ஒருவர் பரிதாப பலி :

21 Nov, 2026 — 12:23 PM
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே லாரி மோதி ஒருவர் பரிதாப பலி :

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் அருகே லாரி மோதிய விபத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி வ.உ.சி.

துறைமுகம் லாரி நிறுத்தும் இடத்தின் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக அந்த நபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த அந்த நபரை மீட்டு, சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

7

கருத்துக்கள்