News & Ad: 75025 54555
தங்கம்:
₹ 11465
வெள்ளி:
₹ 175

கருணை அடிப்படையில் 7 பேருக்குப் பணி நியமன ஆணைகள்: அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார் :

21 Nov, 2026 — 06:59 PM
கருணை அடிப்படையில் 7 பேருக்குப் பணி நியமன ஆணைகள்: அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார் :

தூத்துக்குடியில் பணியிடையே காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிடையே காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்றையதினம் பிற துறைகளில் பணிபுரிந்து பணியிடையே காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட வருவாய் அலகில் கருணை அடிப்படையில் 1 மசால்ஜி, 6 பதிவறை எழுத்தர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மசால்ஜி ஆக அந்தோணி முத்தம்மாள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக உமா மகேஷ்வரி, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக தினேஷ் ராசன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக கோகுல்ராஜ், எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக மாரியப்பன், கயத்தார் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக (ச.பா.தி) சபீயாபேகம், ஏரல் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக (ச.பா.தி) நவீன் ஆகியோர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

6

கருத்துக்கள்