News & Ad: 75025 54555
தங்கம்:
₹ 11465
வெள்ளி:
₹ 175

திருச்செந்தூர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணம் : அலைமோதிய பக்தர்கள் கூட்டம் :

21 Nov, 2026 — 12:19 PM
திருச்செந்தூர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணம் : அலைமோதிய பக்தர்கள் கூட்டம் :

சுபமுகூர்த்த தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம் மற்றும் சண்முகவிலாச மண்டபத்தில் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணங்கள் நடைபெற்றன.

சுபமுகூர்த்த தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றதால் கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

இங்குச் சுபமுகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், நேற்று (நவம்பர் 20) சுபமுகூர்த்த தினம் என்பதால் காலை முதலே மணமக்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கோவில் வளாகத்தில் குவியத் தொடங்கினர்.

கோவில் வளாகம் மற்றும் சண்முகவிலாச மண்டபம் உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணங்கள் சிறப்பாக நடைபெற்றன.

திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியினர் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதனால் கோவில் வளாகம் முழுவதும் புதுமண ஜோடிகள் மற்றும் உறவினர்களின் கூட்டத்தால் அலைமோதியது.

இதற்கிடையே, கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே வெளியூர் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.

அதிகாலையில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இலவசப் பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

7

கருத்துக்கள்