கோவில்பட்டியில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் முருகராஜ் (25).
இவர், சொந்தமாக பயணிகள் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எஸ்ஐ மாரியப்பன் தலைமையிலான போலீசார், கோவில்பட்டி தொழிற்பேட்டை அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த முருகராஜின் ஆட்டோவை சோதனையிட்டனர்.
அப்போது ஆட்டோவில் 3 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 50 கிலோ எடையுள்ள ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள், ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ஆட்டோ டிரைவர் முருகராஜை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்